
இந்த மாதிரி காட்சிக்காக சில நடிகர்கள் அலையோ அலையென்று அலைகிறார்கள். நீங்கள் என்னடான்னா உதட்டு முத்தம் என்றதும் இப்படி அலறுகிறீர்களே? என்று கேட்டதற்கு, நடிகைகளுடன் நெருக்கமாகவே இப்போதுதான் நான் நடிக்க பழகி வருகிறேன். இந்த நேரத்தில் உதடு கவ்வி முத்தம் கொடுப்பதென்பது எனக்கு நடுக்கத்தை கொடுக்கிறது என்றாராம்.
ஆனால் அப்படத்தில் நாயகியாக நடிக்கும் அபர்ணா பாஜ்பாய், முத்தக்காட்சி என்றதும் பல்லால் உதட்டை கடித்துக் கொண்டு, இன்றைக்கு நானா, அஜ்மலான்னு ஒரு கை பாத்துடுவோம் என்று தில்லாக கேமரா முன்பு வந்து நின்றாராம். அவரது வேகத்தை தெரிந்து கொண்ட கருப்பம்பட்டி பட டைரக்டரா பிரபு ராஜ சோழன், அவரை அழைத்து, அஜ்மல் முத்தக்காட்சியில் நடிக்க தயங்குகிறார்.
இதனால் நீங்கள் அவரது கன்னத்தில் முத்தம் கொடுப்பது போன்று காட்சியை மாற்றி விட்டேன் என்று சொன்னாராம். இதனால் புல் மூடோடு வந்து நின்ற அபர்ணா, வெறுத்து விட்டாராம். அதோடு, முத்தக்காட்சியில் நடிக்க தயங்கிய அஜ்மலை அதன்பிறகு பார்க்கும்போதெல்லாம், புதிதாக வயசுக்கு வந்த பெண்ணை கலாய்ப்பது போல் விரட்டி விரட்டி கலாய்த்தாராம் அபர்ணா பாஜ்பாய்.
No comments:
Post a Comment