முத்தமிடுவதில் உலக சாதனை - PointPedrO.com
Headlines News :
Home » » முத்தமிடுவதில் உலக சாதனை

முத்தமிடுவதில் உலக சாதனை

Written By KAJANTHAN JS on Thursday 21 February 2013 | 17:37



முத்தமிடுவதில் உலக சாதனை.

தாய்லாந்தைச் சேர்ந்த மருத்துவமனை பாதுகாப்பு உத்தியோகத்தரான எக்சாய் திரனாரத்தும் (44) அவரது மனைவி லக்ஷனாவும் (33) இணைந்து 58 மணி, 35 நிமிடங்கள் 58 செக்கன்கள் தொடர்ந்தும் முத்தமிட்டு புதிய உலக சாதனை படைத்துள்ளனர்.


இவர்கள் இருவரும் கடந்த வருடம் நிகழ்த்தப்பட்ட கின்னஸ் சாதனையை 8 மணித்தியாலங்களால் முறியடித்துள்ளனர்.

காதலர் தினத்தையொட்டி இடம்பெற்ற முத்தமிடும் போட்டியிலேயே சுமார் இரண்டரை மணித்தியாலங்கள் இந்த ஜோடி முத்தமிட்டு சாதனை படைத்துள்ளது.


http://www.virakesari.lk/image_article/thailandkissww.jpgஇந்த போட்டியில் கலந்துகொள்பவர்கள் தொடர்ச்சியாக நின்றவாறு உணவு மற்றும் பானங்களை இறப்பர் குழாய் மூலம் உள்ளெடுத்தவாறு முத்தம் கொடுக்கக் கோரப்பட்டிருந்தது.

அவர்கள் மலசலகூடத்துக்குச் செல்வதானால் கூட உதட்டோடு உதடு முத்தமிட்டவாறே செல்வது அவசியமாகும்.

இந்தப்போட்டியில் வெற்றிபெற்ற சாதனை ஜோடிக்கு 3ஆயிரத்து 300 அமெரிக்க டொலர்களும் இரு வைர மோதிரங்களும் பரிசாக வழங்கப்பட்டன.

http://www.virakesari.lk/image_article/1thailand,.jpg

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. PointPedrO.com - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger