March 2013 - PointPedrO.com
Headlines News :

சர்ச்சையை ஏற்படுத்தும் பரதேசி உருவான விதம்

Written By KAJANTHAN JS on Saturday 16 March 2013 | 07:59



பாலாவின் படைப்புக்களுக்கு எப்போதும் ஒரு மரியாதை உண்டு. அதேபோல பலாவிற்கு ஒரு கொடூர முகமும் உண்டென அடிக்கடி தகவல்கள் வெளியாது வழக்கம்.
இதனை உண்மைப்படுத்துவது போல தற்போது பலா இயக்கியுள்ள பரதேசி படத்தின் உருவான விதம் என்ற வீடியோ அமைந்துள்ளது. அதாவது படத்தினை  உருவாக்கும் போது பாலா நடிகர்கள் மற்றும் நடிகைகள் மீது கொலைவெறியாக தாக்கி திட்டித் தீர்க்கிறார்.

இந்த காட்சிகள் அனைத்தும் தொடர்ந்து படத்தின் பாத்திரங்கள் செய்வது போன்று காட்டப்படுகிறது. இந்த வீடியோவை பரதேசி படக்குழுவே ஊடகங்களுக்கு வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே பாலா படமெடுக்கிறார் என்ற பெயரில் மனிதர்களை மாடு போல் நடத்துகிறார் என ஒரு குழு ஆவேசமாக புறப்பட்டுள்ள இந்நிலையில் இந்த வீடியோ மேலும் சர்ச்சைகளுக்கு வழிவகும் வகையில் அமைந்துள்ளது.
இப்படத்திற்கு எப்படி யூ சான்றிதழ் வழங்குவது என்றெல்லாம் கேள்விகள் எழுந்துள்ளது. ஒருவேளை தணிக்கை குழு பற்றி அமீர் கூறியவை உண்மையாக இருக்குமோ என்ற சந்தேகத்தினையும் ஏற்படுத்தியுள்ளது
.

மதிலேறி குதித்துத் தப்பித்த விஜய்



விஜய் நடத்தி வைத்த திருமண வைபவத்தின் போது கதவுகளை உடைத்துக்கொண்டு திடீரென மண்டபத்தினுள் நுழைந்த விஜய் ரசிகர்களால் அதிர்ச்சிக்குள்ளாகி மதிலேறி குதித்துத் தப்பித்துச் சென்றுள்ளார் விஜய்.


நடிகர் விஜய் நேற்று 11 ஜோடிகளுக்கு இலவசத் திருமணம் செய்து வைத்தார். இதன்போது ஏற்பட்ட கலாட்டாவிலே விஜய் மதிலேறிக்குதித்து தப்பித்துள்ளார். இச்சம்பவத்தின் போது மண்டபத்திலிருந்த பத்திரிகையாளர்கள், புரோகிதர்கள் மற்றும் பலர் கண்ணாடி சிதறியதில் ஏற்பட்ட காயத்துடன் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.


இவ்வாறு ஏதாவது அசம்பாவிதங்கள் ஏற்படலாம் எனக் கருதியே பத்திரிகையாளர்கள் தவிர 700 பேருக்கு மாத்திரம் இத்திருமண வைபவத்திற்கு அழைப்பு வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனாலும் இத்திருமண வைபவம் குறித்து அறிந்து கொண்ட சுமார் 1500 வரையிலான விஜய் ரசிகர்கள் அங்கு குழுமியுள்ளனர்.


இதன் பின்னர் அங்கு வந்த விஜய் ரசிகர்களுக்கு கையசைத்துவிட்டு மண்டபத்தினுள் சென்று திருமணத்தை முடித்துவிட்டு பேசிக்கொண்டிருக்கும் போதே விஜயின் ரசிகர்கள், தலைவா எனக் கோசமிட்டுக்கொண்டு அதிரடியாக உள்நுழைந்து கதிரைகள், கதவுகள் மற்றும் கண்ணாடிகள் என உடைத்து கலாட்டா செய்துள்ளனர்.


ஆனால் இவ்வாறு அடிதடியாக விஜயை நெருங்க முயன்ற விஜய் ரசிகர்களுக்கு இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. ஏனெனில் பிரச்சினை ஆரம்பித்து சில நிமிடங்களிலேயே ஏனையோர்களுடன் சேர்ந்து விஜயும் மதிலேறிக் குதித்த தப்பித்துவிட்டார். பின்னர் விஜயை அங்கிருந்தவர்கள் பாதுகாப்பாக வழியனுப்பி
 

பெண்களை கற்பழித்து கொன்று சமைத்துச்சாப்பிட்ட பொலிஸ்

Written By KAJANTHAN JS on Monday 4 March 2013 | 03:35


அமெரிக்காவில் பெண்களை கடத்தி கற்பழித்து அவர்களை கொலை செய்து அவர்களின் நரமாமிசத்தை நியூயார்க்கை சேர்ந்தவர் கில்பெர்டோ வல்லே (32). போலீஸ் அதிகாரி மைத்து சாப்பிட்டார் என அவரது மனைவி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக போலீஸ் அதிகாரி கில்பெர்டோ கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளாதுடன் இவர் மீது மான்காட்டன் கோர்ட்டில் வழக்கு நடந்து வரும் போது சமீபத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த கில்பெர்டோவின் முன்னாள் மனைவி காத்லீன் மேன்கான் வல்லே (27) நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.

அப்போது தான் அவரது கம்ப்யூட்டரை சோதனையிட்டபோது, அதில் அவர் கொலை செய்த பெண்களின் நிர்வாண போட்டோக்கள் இருந்ததாக தெரிவித்தார். ஒரு காலகட்டத்தில் தானும் அதுபோன்ற செக்ஸ் தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்டு, கொலை முயற்சியில் இருந்து அவரிடம் தப்பித்ததாக கூறி பயத்தின் மிகுதியில் தேம்பி அழுதார். அவரை நீதிபதி சமாதானப்படுத்தியதுடன் இவரது சாட்சியம் இந்த வழக்கில் போலீஸ் அதிகாரிக்கு எதிராக கடும் ஆதாரமாக உள்ளது என சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

சாரதியாக ஆசைப்படும் யாழ்ப்பாணத்தார்.


யாழ். மாவட்டத்தில் கடந்த நான்கு வருடங்களில் சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கு 60 ஆயிரத்தி 732 பேர் விண்ணப்பித்துள்ளதாக யாழ். மாவட்ட மோட்டார் பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2009 ஆம் ஆண்டு தொடக்கம் 2012 டிசம்பர் வரை இந்த விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இந்த விண்ணப்பங்களின் பிரகாரம் குறித்த காலப்பகுதியில் 38 ஆயிரத்து 252 பேருக்குதற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

2009 ஆம் ஆண்டு 5255 விண்ணப்பங்களும், 2010 ஆம் ஆண்டு 14440 விண்ணப்பங்களும்,2011 ஆம் ஆண்டு 19575 விண்ணப்பங்களும், 2002 ஆம் டிசம்பர் வரை 21462 விண்ணப்பங்களும் கிடைக் கப்பெற்றுள்ளன. இதில் 2009 ஆம் ஆண்டு 3362 பேருக்கும், 2010 ஆம் ஆண்டு 5646 பேருக்கும், 2011 ஆம் ஆண்டு 11931 பேருக்கும், 2012 ஆம் ஆண்டு 17313 பேருக்கும் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுளளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆத்துடன் குறித்த காப்பகுதியில் யாழ். மாவட்ட மோட்டார் பதிவுத் திணைக்களத்தின் ஊடாக 6082 மோட்டார் சைக்கில்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த கார் தீப்பிடித்து எரிந்தது



Print


தெற்கு அதிவேக வீதியில் பயணித்த கார் ஒன்று நேற்று (21) இரவு தீ பிடித்து எரிந்துள்ளது.

காலியில் இருந்து கொட்டாவ நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த காரே இவ்வாறு தீப்பற்றியுள்ளது.

தொடங்கொட 29ஆம் கிலோ மீற்றர் பகுதியில் இடம்பெற்ற இத்தீ விபத்தில் எவருக்கும் உயிர்ச் சேதங்கள் ஏற்படவில்லை எனக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

விமலை நம்பி நான் இல்லை : ஓவியா


களவாணி படத்தில் விமலுடன் ஜோடியாக நடித்தவர் ஓவியா. கேரளத்து வரவான இவருக்கு அதன்பிறகு சிறிய தொய்வு ஏற்பட்டது. இருப்பினும் மீண்டும் அதே விமல் நடித்த கலகலப்பு படத்தின் மூலம் தனது மார்க்கெட்டை பரபரப்பாக்கிக் கொண்டார்.
அத்தோடு, அப்படத்தின் இன்னொரு நாயகியான அஞ்சலியுடன் போட்டி போடுவது போல் ஓவர் கிளாமர் காட்டி நடித்து, என்னாலும் கிளாமர் நாயகியாக முடியும் என்பதை நிரூபித்தார்.

அதற்கடுத்தபடியாக மீண்டும் அதே விமலுடன் சில்லுன்னு ஒரு சந்திப்பு படத்தில் நடித்து வருகிறார்.
இப்படி தொடர்ச்சியாக விமல் படங்களில் ஓவியா நடிப்பதால், அவருக்கு விமல் சிபாரிசு செய்து வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
ஆனால் இதுபற்றி ஓவியாவைக் கேட்டால், இந்த கதைக்கு ஓவியா நடித்தால் நன்றாக இருக்கும் என்கிற பட்சத்தில் டைரக்டர்களாக என்னை அழைக்கிறார்கள். இதுவரை நான் நடித்த எல்லா படங்களிலும் அப்படிதான் வாய்ப்புகள் வந்தன. அதனால் விமல் சொல்லித்தான் எனக்கு படவாய்ப்பு கிடைக்கிறது என்பதில் துளியும் உண்மை இல்லை. மேலும் இந்த சினிமாவில் நான் என்னையும், எனது திறமையையும் நம்பித்தான் இருக்கிறேன். விமலை நம்பி இல்லை என்கிறார் ஓவியா.

கோப்பாய் விபத்தில் துடிதுடித்து பிரிந்த உயிர்!


யாழ். கோப்பாய் பொலிஸ் பிரிவு கோண்டாவில் சந்தியருகில் முச்சக்கரவண்டியும் மோட்டார் சைக்கிளும் நேற்றிரவு 10 மணியளவில் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் நால்வர் காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதில் முச்சக்கரவண்டியில் பயணித்த மூவரும் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் அடங்குவதுடன் இவர்களில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததுடன், ஏனைய நால்வரும் திடீர் கண்காணிப்பு பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்

புதிதாக அரசியல் கட்சிகளை பதிவு செய்ய முடியாது - தேர்தல்கள் செயலகம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுரைப்பற்று மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய பிரதேச சபைகளுக்கான தேர்தல் நிறைவுபெறும் வரை புதிதாக அரசியல் கட்சிகளை பதிவு செய்ய முடியாது என சட்டமா அதிபரின் ஆலோசனைகள் கிடைத்துள்ளதாக செயலகம் குறிப்பிட்டுள்ளது.

தேர்தல் காலத்திற்குள் புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்ய முடியாது என தேர்தல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் செயலகம் சுட்டிக்காட்டியுள்ளதுடன் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட நாள் முதல் தேர்தல் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும் நாள் வரையான காலப் பகுதியே தேர்தல் காலம் என கருதப்படும்

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைபற்று மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய பிரதேச சபைகளுக்கான தேர்தல் இதுவரை நடத்த முடியாமற்போயுள்ளதுடன் இந்த இரண்டு பிரதேச சபைகளுக்கும் ஏற்கனவே வேட்புமனு கோரப்பட்டுள்ளதாகவும் இதற்கமைய குறித்த இரண்டு பிரதேச சபைகளுக்குமான தேர்தல் நிறைவுபெறும் வரை புதிதாக அரசியல் கட்சிகளை பதிவு செய்ய முடியாது என செயலகத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் கூறினார்.

புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்காக 80க்கும் மேற்பட்ட குழுக்கள் ஏற்கனவே விண்ணப்பங்களை அனுப்பிவைத்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது.

மனைவி, குழந்தையை கொன்ற பின்னரே கணவன் தூக்கிட்டு தற்கொலை

Written By KAJANTHAN JS on Saturday 2 March 2013 | 17:44


பாணந்துறைப் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவத்தில், கணவனால் மனைவி மற்றும் அவர்களது குழந்தை கொலை செய்யப்பட்ட பின்னர் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸாரின் புலனாய்வு விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

பாணந்துறைப் பகுதியில் தாய், தந்தை மற்றும் எட்டு மாதக் குழந்தை என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலங்கள் வீடொன்றிற்குள் இருந்து நேற்று மீட்கப்பட்டன.


119 என்ற பொலிஸ் அவசர இலக்கத்துக்கு தொடர்புகொண்டு அப் பிரதேச மக்கள் அறிவித்தமையை அடுத்து மேற்படி வீட்டிலிருந்து அழுகிய நிலையில் சடலங்கள் மீட்கப்பட்டன.
Pics By:J.Sujeewakumar

தற்கொலை செய்துகொண்ட 40 வயதுடைய நிரோசன் இந்திக என்பவர் தனது மனைவியான 35 வயதுடைய சிராணி பத்மலதா மற்றும் எட்டு மாதக் குழந்தையை கொலை செய்துள்ளார். மனைவியின் கழுத்தை கூரிய கத்தியால் வெட்டியுள்ளதோடு குழந்தையை தலையணையால் அழுத்தி கொலை செய்துள்ளார்.



மாத்தறையிலிருந்து மூன்று வருடங்களுக்கு முன்னர் வந்த இவர்கள் வாடகை வீடொன்றில் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் சுமார் ஐந்து மாதங்களுக்கு மேற்படி வீட்டுக்கு வாடகை கட்டாமல் இருந்துள்ளதோடு பல கடன் சுமைகளும் அதிகரித்துள்ளன.

இதனால் கடன்கொடுத்தவர்கள் தினமும் வந்து வீட்டிமுன் கூச்சலிடுவதாகவும் இதனால் இவர்கள் சங்கடத்துக்கு உள்ளாகுவதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை மனைவி மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 தொடர்புடைய செய்தி
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலங்கள் பாணந்துறையில் மீட்
பு

மாணவியை துஷ்பிரயோகம் செய்த பிரபல பாடசாலை மாணவன் கைது




மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த கொழும்பின் பிரபல பாடசாலையைச் சேர்ந்த மாணவன் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நுகேகொட பாடசாலையில் கல்வி கற்கும் மாணவி (வயது15) ஒருவர், கொழும்பின் பிரபலமான பாடசாலை ஒன்றில் அண்மையில் சாதாரண தரப் பரீட்சை எழுதி முடித்த மாணவன் ஒருவரால் கடத்திச் செல்லப்பட்டு மீகொட பகுதியில் உள்ள வீடொன்றினுள்ள வைத்து பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டுள்ளார். இச்சம்பவம் கடந்த 19 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து குறித்த மாணவன், மாணவியை பஸ் ஒன்றில் ஏற்றி நுகேகொட பகுதிக்கு அனுப்பி வைத்துள்ளார். சம்பவம் தொடர்பில் மாணவி தனது தாயிடம் அறியப்படுத்திய போதும் தாய் 25 ஆம் திகதியே மிரிஹான பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸார் சந்தேக நபரை நேற்று(28) கைது செய்துள்ளன

மாணவனை தாக்கிய ஆசிரியர் கைது




முறைகேடாக எட்டுவயது மாணவர் ஒருரை தாக்கிய நாவலபிட்டியில் உள்ள பிரபல பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தரம் நான்கில் கல்விகற்கும் மாணவர் ஒருவர் கணிதப்பாடத்தில் தவறுகள் விடும் போது தினமும் பாட ஆசிரியரால் மட்டப்பலகை மூலம் தோற்பகுதியில் தாக்கப்பட்டுள்ளார்.

குறித்த மாணவன் பாடசாலை விட்டு வந்தவுடன் தாயினால் நீராட செய்த போது மாணவனின் தோற்பகுதியில் தழும்புகள் இருப்பதை தாய் கண்டுள்ளார்.

பின்னர் சம்பவம் தொடர்பில் தாய் நாவலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து பொலிஸார் ஆசிரியரை கைது செய்துள்ளனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சி: ராமதாஸ்




விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் புதல்வர் பாலச்சந்திரன் சிங்களப் படையினரால், கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சிப்பதாக இந்திய பாட்டாளி மக்கள் கட்சியின்  நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் புதல்வர் பாலச்சந்திரன் சிங்களப் படையினரால், கொடூரமாக படுகொலை செய்யப்பட்டதை அறிந்து உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் துயரத்திலும், கொந்தளிப்பிலும் இருக்க, பாலச்சந்திரனை நாங்கள் படுகொலை செய்யவே இல்லை என்று கூறி முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயன்றிருக்கிறார் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.
அதுமட்டுமின்றி, இந்தியாவின் காஷ்மீரிலும் மிகப்பெரிய அளவில் மனித உரிமை மீறல்கள் நடத்தப்பட்டிருப்பதாகவும், ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்பட்டால் அதை எதிர்த்து வாக்களிக்க வேண்டியது தனது கடமை என்பதை இந்தியா அறியும் என்றும் ஆங்கில நாளிதழுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.
அதாவது ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக வாக்களித்தால், காஷ்மீர் மனித உரிமை மீறல் குறித்து நாங்கள் பிரச்சினை எழுப்பவேண்டியிருக்கும் என ராஜபக்ஷ மறைமுகமாக மிரட்டியிருக்கிறார். ராஜபக்ஷவின் இந்தப் பேச்சு கண்டிக்கத்தக்கது.
இதற்குப்பிறகாவது ராஜபக்ஷவின் உண்மை முகத்தை புரிந்துகொண்டு, இலங்கை பிரச்சினையில் உறுதியான நிலைப்பாட்டை இந்தியா எடுக்கவேண்டும். ஆனால், சீனா பக்கம் சாய்ந்து விடக் கூடாது என்ற சொத்தைக் காரணத்தைக் கூறி இலங்கைக்கு சாதகமாகவே மத்திய அரசு நடந்துகொள்கிறது. ஈழத்தில் உள்ள தமிழர்களின் உடமைகளை பறித்துக்கொண்டு, அவர்களை விரட்டியடிக்கும் வேலையில் இலங்கை அரசு ஈடுபட்டிருக்கும் நிலையில், அதற்கு ரூ. 500 கோடியை நிதியுதவியாக அளித்திருக்கிறது இந்திய அரசு.
ஈழத்தமிழர்களின் மறுவாழ்வுக்காக இந்தியா வழங்கும் நிதி முழுவதையும் சிங்களர்களுக்கு வீடுகள் கட்டித்தருவதற்காகவும், சிங்களப்படையினருக்கு சிறப்பு வசதிகளை செய்து தருவதற்காகவும் இலங்கை அரசு செலவழித்துவரும் நிலையில், அந்நாட்டிற்கு இந்தியா மேலும் மேலும் நிதியுதவி அளிப்பது தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளை சிங்களமயமாக்கத் தான் பயன்படுமே தவிர, தமிழர்களுக்கு எந்த வகையிலும் பயனளிக்காது.
அதேபோல், இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் இனப்படுகொலை தொடர்பாக சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்தக்கோரி ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் தீர்மானம் கொண்டுவரும் விசயத்திலும் இலங்கைக்கு சாதகமாகவே இந்திய அரசு நடந்துகொள்கிறது.
இந்த விசயத்தில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று பாராளுமன்றத்தில் உறுதியளித்த மத்திய அரசு, மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தாமல் இருக்கவும், கருத்தொற்றுமை என்ற பெயரில் உப்புசப்பில்லாத தீர்மானத்தைக் கொண்டுவந்து நிறைவேற்றவும் ஆதரவு திரட்டி வருவதாக செய்திகள் வெளியாகிவருகின்றன.
இந்தியாவை மிரட்டும் இலங்கை ஜனாதிபதிக்கு சரியான பாடம் புகட்ட வேண்டுமே தவிர, பணிந்து ரூ.500 கோடி பரிசு வழங்கக்கூடாது. எனவே, இலங்கைக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிதி உதவியை ரத்து செய்வதுடன், இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை நடத்துவதற்கான தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் கொண்டுவந்து நிறைவேற்றத் தேவையான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

கோச்சடையான் படக்குழுவினர் மகிழ்ச்சி



ஈரோஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ரஜினி நடிக்க அவரது மகள் சௌந்தர்யா இயக்கியுள்ள கோச்சடையான் படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில் இன்று காலை காலை முழுப் படத்தினையும் சுப்பர் ஸ்டார் ரஜினி காந்த் மற்றும் கே.எஸ். ரவிக்குமார் ஆகியோர் பார்த்து முழுத் திருப்தியடைந்துள்ளனர்.

இது குறித்து கோச்சடையான் கதாசியர் கே.எஸ். ரவிக்குமார் கூறுகையில், எதிர்பார்த்ததை விட பத்து மடங்கு பிரம்மாண்டமாக படம் உருவாக்கப்பட்டுள்ளது.
படத்தின் நாயகன் சுப்பர் ஸ்டார் ரஜினி காந்த் கூறுகையில், என் வாழ்க்கையில் கோச்சடையான் ஒரு மைல் கல்லாக அமையும், படம் மிகவும் நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்ததுடன் படத்தின் இயக்குனர் சௌந்தர்யாவையும் பாராட்டியுள்ளார் ரஜினி.

தமிழ், தெலுங்கு , ஹந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியிடப்படவுள்ள கோச்சடையான் படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் தற்போது மும்முரமாக இடம்பெற்றுவருகிறது.

சுப்பர் ஸ்டார் ரஜினி காந்த், ஆர். சரத்குமார், தீபிகா படுகோனே, ஜாக்கி ஷெரொப், ஆதி, நாசர், ஷோபனா மற்றும் ருக்மினி ஆகியோர் நடிக்கும் கோச்சடையான் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு மார்ச் மாதம் 19ஆம் திகதி அன்று லண்டனின் பைன்வுட் ஸ்டுடியோவில் ஆரம்பமாகியது.

பின்னர் ஏப்ரல், மே மாதங்களில் சில நாட்கள் திருவனந்தபுரத்திலும் படப்பிடிப்புக்களை நடத்தி படப்பிடிப்புக்களை நிறைவுக்கு கொண்டுவந்தனர் கோச்சடையான் படக்குழுவினர்.

தொடர்ந்து அவதார், டின் டின் போன்ற படங்களில் பயன்படுத்தப்பட்ட மோஷன் கெப்சரிங் தொழில்நுட்பம் போன்றவற்றை பயன்படுத்தி படத்தினை சிறப்பாக வடிவமைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கோச்சடையான் படத்தில் இடம்பெற்றுள்ள தொழில்நுட்பக் கலைஞர்கள் விபவரம் வருமாறு,
கலை - வேலு,
நடனம் - சரோஜ்கான், சின்னிபிரகாஷ், ராஜுசுந்தரம்
உடைகள் வடிவமைப்பு - நீத்தா லுல்லா
சண்டைபயிற்சி - மிராக்கிள் மைக்கேல்
படத்தொகுப்பு - ஆன்டனி,
ஒலிப்பதிவு - ரஸுல் பூக்குட்டி
தயாரிப்பு மேற்பார்வை - உதயக்குமார்
பாடல்கள் - கவிஞர் வாலி, கவியரசு வைரமுத்து
கிரியேட்டிவ் கன்சல்டன்ட் - சு. மாதேஷ்
இசை - இசைப்புயல்  ஏ.ஆர். .ரஹ்மான்
கதை திரைக்கதை வசனம் - கே.எஸ். ரவிக்குமார்
இயக்கம் - சௌந்தர்யா ஆர் அஷ்
வி

Misteri

PintPedrO.com. Powered by Blogger.
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. PointPedrO.com - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger