Home »
» இவ்வருடமும் களைகட்டிய பிரேசில் 'கார்னிவெல்'
இவ்வருடமும் களைகட்டிய பிரேசில் 'கார்னிவெல்'
Written By KAJANTHAN JS on Thursday, 21 February 2013 | 17:44
இவ்வருடமும் களைகட்டிய பிரேசில் 'கார்னிவெல்'
பிரேசிலில் வருடாந்தம் நடைபெறும் கார்னிவெல் கொண்டாட்டங்கள் நேற்று முன் தினம் ஆரம்பமாகியது.
இக்கொண்டாட்டங்கள் 4 நாட்கள் வரை நடைபெறுவது வழமை.
உலகில் இடம்பெறும் மிகப்பெரிய களியாட்ட விழாக்களில் ஒன்றாக இது கருதப்படுகின்றது.
இக் கொண்டாட்டங்களில் உலகம் பூராகவும் இருந்து இலட்சக்கணக்கோனோர் கலந்துகொள்வர்.
ஆட்டம், பாட்டம் , கொண்டாட்டம் என களைகட்டும் இத்திருவிழா மூலம் பிரேசிலுக்கு இம்முறை 665 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருவாய் கிட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
பிரேசிலின் பல நகரங்களிலும் இக் கொண்டாட்டங்கள் நடைபெற்றாலும் தலைநகர் ரியோ டி ஜெனிரியோவில் நடைபெறும் கொண்டாட்டமே சிறப்பானதாகக் கருதப்படுகின்றது.
இவ்விழாவின் முக்கிய அம்சமாக கருதப்படுவது சாம்பா நடனப் போட்டியாகும்.
No comments:
Post a Comment