PointPedrO.com
Headlines News :

Latest Post

கோப்பாய் விபத்தில் துடிதுடித்து பிரிந்த உயிர்!

Written By KAJANTHAN JS on Monday, 4 March 2013 | 03:24


யாழ். கோப்பாய் பொலிஸ் பிரிவு கோண்டாவில் சந்தியருகில் முச்சக்கரவண்டியும் மோட்டார் சைக்கிளும் நேற்றிரவு 10 மணியளவில் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் நால்வர் காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதில் முச்சக்கரவண்டியில் பயணித்த மூவரும் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் அடங்குவதுடன் இவர்களில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததுடன், ஏனைய நால்வரும் திடீர் கண்காணிப்பு பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்

புதிதாக அரசியல் கட்சிகளை பதிவு செய்ய முடியாது - தேர்தல்கள் செயலகம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுரைப்பற்று மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய பிரதேச சபைகளுக்கான தேர்தல் நிறைவுபெறும் வரை புதிதாக அரசியல் கட்சிகளை பதிவு செய்ய முடியாது என சட்டமா அதிபரின் ஆலோசனைகள் கிடைத்துள்ளதாக செயலகம் குறிப்பிட்டுள்ளது.

தேர்தல் காலத்திற்குள் புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்ய முடியாது என தேர்தல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் செயலகம் சுட்டிக்காட்டியுள்ளதுடன் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட நாள் முதல் தேர்தல் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும் நாள் வரையான காலப் பகுதியே தேர்தல் காலம் என கருதப்படும்

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைபற்று மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய பிரதேச சபைகளுக்கான தேர்தல் இதுவரை நடத்த முடியாமற்போயுள்ளதுடன் இந்த இரண்டு பிரதேச சபைகளுக்கும் ஏற்கனவே வேட்புமனு கோரப்பட்டுள்ளதாகவும் இதற்கமைய குறித்த இரண்டு பிரதேச சபைகளுக்குமான தேர்தல் நிறைவுபெறும் வரை புதிதாக அரசியல் கட்சிகளை பதிவு செய்ய முடியாது என செயலகத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் கூறினார்.

புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்காக 80க்கும் மேற்பட்ட குழுக்கள் ஏற்கனவே விண்ணப்பங்களை அனுப்பிவைத்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது.

மனைவி, குழந்தையை கொன்ற பின்னரே கணவன் தூக்கிட்டு தற்கொலை

Written By KAJANTHAN JS on Saturday, 2 March 2013 | 17:44


பாணந்துறைப் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவத்தில், கணவனால் மனைவி மற்றும் அவர்களது குழந்தை கொலை செய்யப்பட்ட பின்னர் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸாரின் புலனாய்வு விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

பாணந்துறைப் பகுதியில் தாய், தந்தை மற்றும் எட்டு மாதக் குழந்தை என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலங்கள் வீடொன்றிற்குள் இருந்து நேற்று மீட்கப்பட்டன.


119 என்ற பொலிஸ் அவசர இலக்கத்துக்கு தொடர்புகொண்டு அப் பிரதேச மக்கள் அறிவித்தமையை அடுத்து மேற்படி வீட்டிலிருந்து அழுகிய நிலையில் சடலங்கள் மீட்கப்பட்டன.
Pics By:J.Sujeewakumar

தற்கொலை செய்துகொண்ட 40 வயதுடைய நிரோசன் இந்திக என்பவர் தனது மனைவியான 35 வயதுடைய சிராணி பத்மலதா மற்றும் எட்டு மாதக் குழந்தையை கொலை செய்துள்ளார். மனைவியின் கழுத்தை கூரிய கத்தியால் வெட்டியுள்ளதோடு குழந்தையை தலையணையால் அழுத்தி கொலை செய்துள்ளார்.



மாத்தறையிலிருந்து மூன்று வருடங்களுக்கு முன்னர் வந்த இவர்கள் வாடகை வீடொன்றில் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் சுமார் ஐந்து மாதங்களுக்கு மேற்படி வீட்டுக்கு வாடகை கட்டாமல் இருந்துள்ளதோடு பல கடன் சுமைகளும் அதிகரித்துள்ளன.

இதனால் கடன்கொடுத்தவர்கள் தினமும் வந்து வீட்டிமுன் கூச்சலிடுவதாகவும் இதனால் இவர்கள் சங்கடத்துக்கு உள்ளாகுவதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை மனைவி மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 தொடர்புடைய செய்தி
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலங்கள் பாணந்துறையில் மீட்
பு

மாணவியை துஷ்பிரயோகம் செய்த பிரபல பாடசாலை மாணவன் கைது




மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த கொழும்பின் பிரபல பாடசாலையைச் சேர்ந்த மாணவன் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நுகேகொட பாடசாலையில் கல்வி கற்கும் மாணவி (வயது15) ஒருவர், கொழும்பின் பிரபலமான பாடசாலை ஒன்றில் அண்மையில் சாதாரண தரப் பரீட்சை எழுதி முடித்த மாணவன் ஒருவரால் கடத்திச் செல்லப்பட்டு மீகொட பகுதியில் உள்ள வீடொன்றினுள்ள வைத்து பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டுள்ளார். இச்சம்பவம் கடந்த 19 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து குறித்த மாணவன், மாணவியை பஸ் ஒன்றில் ஏற்றி நுகேகொட பகுதிக்கு அனுப்பி வைத்துள்ளார். சம்பவம் தொடர்பில் மாணவி தனது தாயிடம் அறியப்படுத்திய போதும் தாய் 25 ஆம் திகதியே மிரிஹான பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸார் சந்தேக நபரை நேற்று(28) கைது செய்துள்ளன

மாணவனை தாக்கிய ஆசிரியர் கைது




முறைகேடாக எட்டுவயது மாணவர் ஒருரை தாக்கிய நாவலபிட்டியில் உள்ள பிரபல பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தரம் நான்கில் கல்விகற்கும் மாணவர் ஒருவர் கணிதப்பாடத்தில் தவறுகள் விடும் போது தினமும் பாட ஆசிரியரால் மட்டப்பலகை மூலம் தோற்பகுதியில் தாக்கப்பட்டுள்ளார்.

குறித்த மாணவன் பாடசாலை விட்டு வந்தவுடன் தாயினால் நீராட செய்த போது மாணவனின் தோற்பகுதியில் தழும்புகள் இருப்பதை தாய் கண்டுள்ளார்.

பின்னர் சம்பவம் தொடர்பில் தாய் நாவலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து பொலிஸார் ஆசிரியரை கைது செய்துள்ளனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சி: ராமதாஸ்




விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் புதல்வர் பாலச்சந்திரன் சிங்களப் படையினரால், கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சிப்பதாக இந்திய பாட்டாளி மக்கள் கட்சியின்  நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் புதல்வர் பாலச்சந்திரன் சிங்களப் படையினரால், கொடூரமாக படுகொலை செய்யப்பட்டதை அறிந்து உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் துயரத்திலும், கொந்தளிப்பிலும் இருக்க, பாலச்சந்திரனை நாங்கள் படுகொலை செய்யவே இல்லை என்று கூறி முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயன்றிருக்கிறார் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.
அதுமட்டுமின்றி, இந்தியாவின் காஷ்மீரிலும் மிகப்பெரிய அளவில் மனித உரிமை மீறல்கள் நடத்தப்பட்டிருப்பதாகவும், ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்பட்டால் அதை எதிர்த்து வாக்களிக்க வேண்டியது தனது கடமை என்பதை இந்தியா அறியும் என்றும் ஆங்கில நாளிதழுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.
அதாவது ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக வாக்களித்தால், காஷ்மீர் மனித உரிமை மீறல் குறித்து நாங்கள் பிரச்சினை எழுப்பவேண்டியிருக்கும் என ராஜபக்ஷ மறைமுகமாக மிரட்டியிருக்கிறார். ராஜபக்ஷவின் இந்தப் பேச்சு கண்டிக்கத்தக்கது.
இதற்குப்பிறகாவது ராஜபக்ஷவின் உண்மை முகத்தை புரிந்துகொண்டு, இலங்கை பிரச்சினையில் உறுதியான நிலைப்பாட்டை இந்தியா எடுக்கவேண்டும். ஆனால், சீனா பக்கம் சாய்ந்து விடக் கூடாது என்ற சொத்தைக் காரணத்தைக் கூறி இலங்கைக்கு சாதகமாகவே மத்திய அரசு நடந்துகொள்கிறது. ஈழத்தில் உள்ள தமிழர்களின் உடமைகளை பறித்துக்கொண்டு, அவர்களை விரட்டியடிக்கும் வேலையில் இலங்கை அரசு ஈடுபட்டிருக்கும் நிலையில், அதற்கு ரூ. 500 கோடியை நிதியுதவியாக அளித்திருக்கிறது இந்திய அரசு.
ஈழத்தமிழர்களின் மறுவாழ்வுக்காக இந்தியா வழங்கும் நிதி முழுவதையும் சிங்களர்களுக்கு வீடுகள் கட்டித்தருவதற்காகவும், சிங்களப்படையினருக்கு சிறப்பு வசதிகளை செய்து தருவதற்காகவும் இலங்கை அரசு செலவழித்துவரும் நிலையில், அந்நாட்டிற்கு இந்தியா மேலும் மேலும் நிதியுதவி அளிப்பது தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளை சிங்களமயமாக்கத் தான் பயன்படுமே தவிர, தமிழர்களுக்கு எந்த வகையிலும் பயனளிக்காது.
அதேபோல், இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் இனப்படுகொலை தொடர்பாக சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்தக்கோரி ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் தீர்மானம் கொண்டுவரும் விசயத்திலும் இலங்கைக்கு சாதகமாகவே இந்திய அரசு நடந்துகொள்கிறது.
இந்த விசயத்தில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று பாராளுமன்றத்தில் உறுதியளித்த மத்திய அரசு, மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தாமல் இருக்கவும், கருத்தொற்றுமை என்ற பெயரில் உப்புசப்பில்லாத தீர்மானத்தைக் கொண்டுவந்து நிறைவேற்றவும் ஆதரவு திரட்டி வருவதாக செய்திகள் வெளியாகிவருகின்றன.
இந்தியாவை மிரட்டும் இலங்கை ஜனாதிபதிக்கு சரியான பாடம் புகட்ட வேண்டுமே தவிர, பணிந்து ரூ.500 கோடி பரிசு வழங்கக்கூடாது. எனவே, இலங்கைக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிதி உதவியை ரத்து செய்வதுடன், இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை நடத்துவதற்கான தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் கொண்டுவந்து நிறைவேற்றத் தேவையான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

கோச்சடையான் படக்குழுவினர் மகிழ்ச்சி



ஈரோஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ரஜினி நடிக்க அவரது மகள் சௌந்தர்யா இயக்கியுள்ள கோச்சடையான் படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில் இன்று காலை காலை முழுப் படத்தினையும் சுப்பர் ஸ்டார் ரஜினி காந்த் மற்றும் கே.எஸ். ரவிக்குமார் ஆகியோர் பார்த்து முழுத் திருப்தியடைந்துள்ளனர்.

இது குறித்து கோச்சடையான் கதாசியர் கே.எஸ். ரவிக்குமார் கூறுகையில், எதிர்பார்த்ததை விட பத்து மடங்கு பிரம்மாண்டமாக படம் உருவாக்கப்பட்டுள்ளது.
படத்தின் நாயகன் சுப்பர் ஸ்டார் ரஜினி காந்த் கூறுகையில், என் வாழ்க்கையில் கோச்சடையான் ஒரு மைல் கல்லாக அமையும், படம் மிகவும் நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்ததுடன் படத்தின் இயக்குனர் சௌந்தர்யாவையும் பாராட்டியுள்ளார் ரஜினி.

தமிழ், தெலுங்கு , ஹந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியிடப்படவுள்ள கோச்சடையான் படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் தற்போது மும்முரமாக இடம்பெற்றுவருகிறது.

சுப்பர் ஸ்டார் ரஜினி காந்த், ஆர். சரத்குமார், தீபிகா படுகோனே, ஜாக்கி ஷெரொப், ஆதி, நாசர், ஷோபனா மற்றும் ருக்மினி ஆகியோர் நடிக்கும் கோச்சடையான் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு மார்ச் மாதம் 19ஆம் திகதி அன்று லண்டனின் பைன்வுட் ஸ்டுடியோவில் ஆரம்பமாகியது.

பின்னர் ஏப்ரல், மே மாதங்களில் சில நாட்கள் திருவனந்தபுரத்திலும் படப்பிடிப்புக்களை நடத்தி படப்பிடிப்புக்களை நிறைவுக்கு கொண்டுவந்தனர் கோச்சடையான் படக்குழுவினர்.

தொடர்ந்து அவதார், டின் டின் போன்ற படங்களில் பயன்படுத்தப்பட்ட மோஷன் கெப்சரிங் தொழில்நுட்பம் போன்றவற்றை பயன்படுத்தி படத்தினை சிறப்பாக வடிவமைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கோச்சடையான் படத்தில் இடம்பெற்றுள்ள தொழில்நுட்பக் கலைஞர்கள் விபவரம் வருமாறு,
கலை - வேலு,
நடனம் - சரோஜ்கான், சின்னிபிரகாஷ், ராஜுசுந்தரம்
உடைகள் வடிவமைப்பு - நீத்தா லுல்லா
சண்டைபயிற்சி - மிராக்கிள் மைக்கேல்
படத்தொகுப்பு - ஆன்டனி,
ஒலிப்பதிவு - ரஸுல் பூக்குட்டி
தயாரிப்பு மேற்பார்வை - உதயக்குமார்
பாடல்கள் - கவிஞர் வாலி, கவியரசு வைரமுத்து
கிரியேட்டிவ் கன்சல்டன்ட் - சு. மாதேஷ்
இசை - இசைப்புயல்  ஏ.ஆர். .ரஹ்மான்
கதை திரைக்கதை வசனம் - கே.எஸ். ரவிக்குமார்
இயக்கம் - சௌந்தர்யா ஆர் அஷ்
வி

Misteri

PintPedrO.com. Powered by Blogger.
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. PointPedrO.com - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger