
தெற்கு அதிவேக வீதியில் பயணித்த கார் ஒன்று நேற்று (21) இரவு தீ பிடித்து எரிந்துள்ளது.
காலியில் இருந்து கொட்டாவ நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த காரே இவ்வாறு தீப்பற்றியுள்ளது.
தொடங்கொட 29ஆம் கிலோ மீற்றர் பகுதியில் இடம்பெற்ற இத்தீ விபத்தில் எவருக்கும் உயிர்ச் சேதங்கள் ஏற்படவில்லை எனக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.








No comments:
Post a Comment